Legendary Actress Joins Jyothika Film :

90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்தவர் ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு நீண்ட காலம் ஓய்வில் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்தார்.

அந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடித்துவரும் அவர் அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவர் அடுத்ததாக நடிக்கும் படத்தை பாபநாசம், 36 வயதினிலே புகழ் ஜீத்து ஜோசப் இயக்கவுள்ளார். இதில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார்.

தல 60 தொடங்கும் நாள் இதுதான் – ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்!

இப்படத்தில் இவர்கள் இருவரும் சகோதரர்களா நடிப்பதாகவும் ஒரு சம்பவத்தில் இருந்து குடும்பமாக இவர்கள் எப்படி ஒன்றிணைந்து வெளியேறுகிறார்கள் என்பதுதான் இப்படத்தின் மையக்கரு என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். இப்படத்தில் சத்யராஜ் இவர்களது தந்தையாக நடிக்கிறார்.

இதுபோக தற்போது பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியும் இப்படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் கார்த்தி சிறு வயதிலேயே தொலைந்துவிடுவாராம். வாலிபன் ஆன பிறகு அவர் வரும்போது அவர்தான் ஜோதிகாவின் உண்மையான தம்பியா என்பதை கண்டறிவதுதான் இப்படத்தின் சஸ்பென்ஸாம். பாபநாசம் பாணியில் இந்த படமும் விறுவிறுப்பாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.