புதிய படப்பிடிப்பிற்காக தூத்துக்குடி சென்றுள்ளார் லெஜன்ட் சரவணன்.
தொழிலதிபராக இருக்கும் லெஜென்ட் சரவணன் அவர்கள்,இந்திய சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் புகழ்பெற்று திகழ்ந்து விளங்குகிறார்.
இவரது நடிப்பில் தி லேஜன்ட் என்ற திரைப்படம் வெளியானது. ஜேடி ஜெர்ரி இயக்கத்திலும், தி லெஜன்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன் தயாரிப்பில், வெளியான இந்தப் படத்தில் அருள் லெஜெண்ட் சரவணன் ஹீரோவாக நடித்திருந்தார்.
மேலும் ஊர்வசி ரவுடேலா, பிரபு, விவேக், சுமன், யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்து இருந்தனர். இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் படித்துவிட்டு இந்தியா திரும்பும் போது விஞ்ஞானி சரவணன் ஆக இருக்கும் இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியாக இந்த படம் இருந்தது.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இயக்குனர் ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக தூத்துக்குடி சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் ரசிகர்கள் பலரும் அவருக்கு மேளதாளத்துடன் பொன்னாடை அணிவித்து, மாலை மரியாதையுடன் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.