லெஜெண்ட் சரவணனின் நியூ லுக் புகைப்படங்கள் இணையதளத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்பவர் லெஜெண்ட் சரவணன். லெஜெண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளரான இவர் விளம்பரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி கடந்த ஆண்டு வெளியான தி லெஜன்ட் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் பிரபலமானார்.

அவரது தயாரிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் லெஜெண்ட் சரவணன் தனது நியூ லுக் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். மேலும் அதில், புதிய மாற்றம் விவரங்கள் விரைவில் எனவும் குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். இதன் மூலம் லெஜெண்ட் சரவணன் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என உறுதியானதை தொடர்ந்து அப்புகைப்படங்களை ரசிகர்கள் ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர்.