
தி லெஜெண்ட் திரைப்படம் கொடுத்த தைரியத்தில் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் லெஜன்ட் சரவணன்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன் அருள் என்பவர் தி லெஜன்ட் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகம் ஆகி உள்ளார்.

கடந்த மாதங்களில் தானே இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக உள்ளது. இதனை எடுத்து சமீபத்தில் இந்த படம் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் லெஜன்ட் சரவணன் அவர்கள் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர் தி லெஜென்ட் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் விரைவில் ரசிகர்களை சந்திக்கப் போவதாக அறிவித்திருந்தார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய அடுத்த படம் தி லெஜன்ட் படத்தை காட்டிலும் மிகப் பிரம்மாண்டமாகவும் இன்டர்நேஷனல் லெவலிலும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

லெஜன்ட் சரவணன் அவர்களின் இந்த அறிவிப்பு குறித்து தான் ரசிகர்கள் ஆளாளுக்கு சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.