Lebanon Bomb Blast
Lebanon Bomb Blast

Lebanon Bomb Blast : உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா தாக்குதல் பத்தாமல் இப்ப, லெபனான் நாட்டில் கோவை வெடிகுண்டு விபத்து நடந்துள்ளது. லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று நடந்த சக்தி வாய்ந்த வெடி விபத்தில் 78 பேர் பலியாகி உள்ளனர். 4000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த வெடி விபத்திற்கு காரணம் என்னவென்று அரசுத் தரப்பில் கூறியதாவது: பெய்ரூட் துறைமுக சேமிப்பு கிடங்கில் கடந்த 6 ஆண்டுகளாக துறைமுக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டில் நடந்த வெடிகுண்டு விபத்தை அப்படியே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதை பார்த்தால் நெஞ்சமே பதைபதைக்கிறது.

இதனால் பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து பிரபலங்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வண்ணம் உள்ளனர். மேலும்மேலும், #PrayForLebanon என்ற ஹாஷ்டேக்கும் உலகளவில் டிரெண்டாகி வருகிறது.

ஏற்கனவே இந்த நாடு போர் பாதிப்பால் பாதிப்பு அடைந்துள்ள அந்த நாடு மீண்டும் ஒரு இழப்பை சந்தித்துள்ளதை அறிந்த பலரும் உதவவும் முன் வந்துள்ளனர்.

சாந்தனு ட்வீட் பெய்ரூட் டுடே செய்தி சேனல் வெளியிட்ட பிரம்மாண்ட வெடி விபத்து வீடியோவை பதிவிட்டு, நடிகர் சாந்தனுவும் தனது இரங்கலையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துள்ளார். பேரழிவுகளுடன் மீண்டும் பயமுறுத்த தொடங்கி இருக்கிறது. லெபனான் மக்கள் இந்த ஆபத்தில் இருந்து மீள என்னுடைய பிரார்த்தனைகள் என நடிகை பிரியா ஆனந்த் பதிவிட்டுள்ளார்.

இதுபோன்ற பல பிரபலங்களும் சமூக வலைதளங்களில் தங்கள் இரங்கலை தெரிவித்து வண்ணம் உள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.