Leaders in the final campaign : EPS, Stalin , OPS, Rahul Gandhi, Edappadi Palanisamy | Modi | Tamil nadu | India | Chennai

Leaders in the final campaign :

சென்னை: அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவடைவதால், அரசியல் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வில்லாபுரம், அனுபாநடை உள்ளிட்ட பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை சூலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார்.

அப்போது பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின், பாஜக தலைவர்கள் தோல்வி பயத்தில் பொய்யான தகவலை வெளியிட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.

மேலும் அப்பநாயக்கன்பாளையத்தில் நடைபயணமாக சென்று பொதுமக்களை ஸ்டாலின் சந்தித்து வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடதக்கது.

உச்சக்கட்ட கவர்ச்சி காட்டிய யாஷிகா, மட்டமாக திட்டும் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே.!

சூலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரசின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வாக்கு சேகரித்தார். பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த மோடியின் அரசுடன் எடப்பாடி அரசும் சேர்ந்துவிட்டதாக அவர் விமர்சித்தார்.

அரசவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரித்தார். அதில் பேசிய அவர், டிடிவி தினகரன் மீது கடுமையாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்ம் , ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி , சூலூர் ஆகிய 4 தொகுதிகளிலும் வரும் ஞாயிற்றுக் கிழமை(19.05.19) அன்று வாக்குப்பதிவு நடைபெறும்.

ஆகவே வரும் 19- ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால் நாளை மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைவதால், அரசியல் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here