Laxmi Ramakrishnan Shocking Decision
Laxmi Ramakrishnan Shocking Decision

வனிதாவால் ஏற்பட்ட பிரச்சனைகளால் லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த முடிவை ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளது.

Laxmi Ramakrishnan Shocking Decision : தமிழ் சினிமாவில் நடிகையாகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். மேலும் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து சமூகப் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பீட்டர் பால் என்பவரைப் பற்றி பேசி இருந்தார்.

இதனால் வனிதா என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏன் தலையிட வேண்டும் என லட்சுமி ராமகிருஷ்ணனுடன் சண்டையில் ஈடுபட்டார். தகாத வார்த்தைகளால் அவரை வனிதா தாக்கிப் பேசினார்.

இதனால் இருவரும் மாறி மாறி மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி கொண்டனர். அதன்பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் சமூக வலைதள பக்கங்களில் யாருடைய பிரச்சனை குறித்தும் பேசவில்லை.

இந்த நிலையில் தற்போது அர்ச்சகர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தது குறித்து ஒருவர் உங்களுடைய கருத்து என்ன என லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு டேக் செய்து கேள்வி எழுப்பியிருந்தார்.

இதன் பிறகு ராமகிருஷ்ணன் இனி நான் சமூக வலைதள பக்கங்களில் யாருடைய பிரச்சனைகள் குறித்தும் பேச போவதில்லை. என்னுடைய ஷோக்கள் மூலமாகும் தனிப்பட்ட வழியிலும் நான் செய்ய வேண்டிய நற்காரியங்களைச் செய்து கொண்டே இருப்பேன்.

சமூக வலைதளங்களில் எந்த ஒரு பிரச்சனைக்கும் என்னை டேக் செய்ய வேண்டாம் எனக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.