சாக்கடையில் ஒருமுறை கல்லை எறிந்து விட்டேன். இனிமே நான் நகர்ந்து செல்வதே நல்லது என வனிதா குறித்து பிரபல நடிகை பேசியுள்ளார்.

Laxmi Ramakrishnan About Vanitha : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், நடிகையான விஜய் குமார் மற்றும் மஞ்சுளா ஆகி தம்பதியரின் மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார். சந்திரலேகா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஒன்றுக்கு மூன்று திருமணங்கள் செய்து மூன்றும் பிரிவில் முடிந்தது.

தற்போது இரண்டு மகள்களுடன் இணைந்து தனியாக வாழ்ந்து வருகிறார். மேலும் திரைப்படங்களில் டிவி நிகழ்ச்சிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டபோது அது பல்வேறு சர்ச்சையை கிளப்பியது. இவரது திருமணத்தை விமர்சனம் செய்த லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா தகாத முறையும திட்டித் தீர்த்தார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதா ஒரு சாக்கடை. ஒருமுறை தெரியாமல் சாக்கடையில் கல் எறிந்து விட்டேன். தற்போது விலகிச் செல்வதுதான் நல்லது எனக் கூறியுள்ளார். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டதற்கு அவர் நீதிமன்றத்திற்கு பயப்படுவதில்லை. ஆகையால் நான் வழக்கு தொடுக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.