Laxmi menen

கவர்ச்சி போட்டோ ரசிகரை கண்டபடி கெட்ட வார்த்தையில் திட்டி தீர்த்துள்ளார் நடிகை லட்சுமி மேனன்.

Laxmi Menen Reply to Fan : தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக கும்கி படத்தில் நாயகியாக நடித்து அறிமுகமானவர் லட்சுமி மேனன்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து சசிகுமார், விஷால், ஜெயம் ரவி என பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்து இருந்தார்.

ஆனாலும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் சில வருடங்கள் சினிமாவை விட்டு கொஞ்சம் தள்ளி இருக்கிறார். இதனையடுத்து சமீபத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இவர் நடித்த புலிகுத்தி பாண்டி என்ற திரைப்படம் நேரடியாக சன் டிவியில் வெளியானது.

இப்படத்தை தொடர்ந்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறீர்களா எனக் கேட்டதற்கு என்னால் பாத்ரூம் எல்லாம் கழுவ முடியாது எனக் கூறி சர்ச்சையில் சிக்கினார்.

இதனைத் தொடர்ந்து தற்போது ரசிகர் ஒருவர் உங்களின் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுங்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு லட்சுமி மேனன் கெட்ட வார்த்தையில் திட்டி பதிலளித்துள்ளார். இந்தப்பதிவு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.