நடிகர் லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் “ருத்ரன்”. இப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு உற்சாகம் அடைந்துள்ள ரசிகர்கள் இப்போஸ்டரை வைரலாகி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திரமாக திகழ்பவர் தான் ராகவா லாரன்ஸ். இவர் பல திறமைகளைக் கொண்டவர். ஏனென்றால் இவர் ஒரு நடன இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், கதையாசிரியர் போன்ற பல துறைகளில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது தயாராகி கொண்டிருக்கும் படம்தான் “ருத்ரன்”.

"ருத்ரன்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு - உற்சாகத்தில் ரசிகர்கள்.

இப்படத்தின் மூலம் பல வெற்றி படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் அவர்கள் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். மேலும் இப்படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், ப்ரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

"ருத்ரன்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு - உற்சாகத்தில் ரசிகர்கள்.

ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த “ருத்ரன்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல  மொழிகளில் வெளிவர இருக்கும் நிலையில் இப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தது. அந்த வகையில் இப்படத்திற்கான “ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை” சமீபத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களின் இடையே உற்சாகத்தோடு வைரலாகி வருகிறது.

"ருத்ரன்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு - உற்சாகத்தில் ரசிகர்கள்.