Lawrence Help to Theepetti Ganesan
Lawrence Help to Theepetti Ganesan

அஜித்திடம் உதவி கேட்ட பில்லா 2 நடிகருக்கு உதவிய கையோடு இந்த வீடியோவை அஜித்திற்கு அனுப்பியுள்ளார் லாரன்ஸ்.

Lawrence Help to Theepetti Ganesan : கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பலர் வேலை வாய்ப்புகளை இழந்து தவித்து வருகின்றனர்.

பொதுஜன மக்களைப் போலவே சாதாரண திரையுலக நடிகர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெரு தெருவாக அலைந்த குடும்பத்தை வீட்டிற்கு அழைத்து உதவி செய்த பிரபல நடிகர் – வைரலாகும் புகைப்படங்கள்.!

அஜீத்துடன் பில்லா 2 உள்ளிட்ட படங்களில் நடித்த தீப்பெட்டி கணேசன் பெரிய அளவில் வாய்ப்பும் இல்லை தற்போது ஊரடங்கு உத்தரவால் கையில் பணமும் இல்லை. குழந்தைக்கு பால் வாங்க கூட காசு இல்லை எனக்கூறி கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரிய நடிகரான அஜித்திடம் உதவி கேட்டிருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த ராகவா லாரன்ஸ் அவருக்கு உதவியுள்ளார். மேலும் உங்களின் வீடியோவை நான் அஜித் சாரின் மேனேஜருக்கு அனுப்பியுள்ளேன். நிச்சயம் அவர் உங்களுக்கு உதவுவார் எனவும் லாரன்ஸ் கூறியுள்ளார்.