லத்தி திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் அப்டேட் வைரல்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் துப்பறிவாளன் 2, லத்தி, மார்க் ஆண்டனி உட்பட பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இவற்றில் ‘லத்தி’ திரைப்படத்தை ஏ வினோத்குமார் இயக்கியுள்ளார். இதில் விஷாலுடன் இணைந்து சுனைனா, பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் . ராணா புரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் மூலமாக ரமணா மற்றும் நந்தா உள்ளிட்டோர் படத்தை தயாரித்துள்ளனர். மேலும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

விஷாலின் லத்தி… போஸ்டருடன் வெளியான சென்சார் அப்டேட்.!

பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்ய என் பி ஸ்ரீகாந்த் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் மோஷன் போஸ்டர், டீசர், ட்ரெய்லர் பாடல்கள் உள்ளிட்டவை வெளியாக்கி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளது. இப்படியான நிலையில் இப்படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு தணிகை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இது தொடர்பான புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.