மேடையில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென விஷால் ரோபோ ஷங்கரின் கன்னத்தில் அறைந்து விட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

விஷால் நடிப்பில் தற்போது அதிரடியாக தயாராகி இருக்கும் திரைப்படம் தான் “லத்தி சார்ஜ்”. இப்படத்தை ஆர்.வினோத்குமார் இயக்க ராணா புரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக முன்னணி நடிகை சுனைனா நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்திற்கான டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது.

மேடையில் வைத்து ரோபோ ஷங்கரை திடீரென அறைந்த விஷால் - வைரலாகும் வீடியோ பதிவு.

விரைவில் திரைக்கு வர தயாராகி இருக்கும் இப்படத்தின் டீசர் விழா நேற்று நடைபெற்றது. அதில் லத்தி படத்தில் பணியாற்றிய அனைவரும் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியின் மேடையில் விஷால், ரோபோ ஷங்கர் மற்றும் சூரி மூவரும் பேசிக் கொண்டிருந்தனர் அப்போது விஷால் ரோபோ ஷங்கர் குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று கன்னத்தில் அறைந்து விட்டார்.

மேடையில் வைத்து ரோபோ ஷங்கரை திடீரென அறைந்த விஷால் - வைரலாகும் வீடியோ பதிவு.

அதன் பிறகு விஷால் சூரியையும் அறைந்து விட்டார் . அதனைப் பார்த்த அனைவரும் மிரண்டு போய் அமர்ந்திருக்கும் பொழுது திடீரென்று மேடையில் மூவரும் சிரித்து பேசி தாங்கள் நடித்ததாக கூறினர். இவர்களின் இந்த வேடிக்கையான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேடையில் ரோபோ சங்கர், சூரியை அறைந்த விஷால்