நடிகர் விஷாலின் லத்தி திரைப்படத்திலிருந்து ‘ஊஞ்சல் மனம்’ என்ற செகண்ட் சிங்கிள் பாடலின் லிரிக்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் துப்பறிவாளன் 2, லத்தி, மார்க் ஆண்டனி உட்பட பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இவற்றில் லத்தி திரைப்படத்தை ஏ வினோத்குமார் இயக்க சுனைனா, பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

விஷாலின் லத்தி… 'ஊஞ்சல் மனம்' பாடலின் லிரிக்ஸ் வீடியோ வைரல்!.

ராணா புரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் மூலமாக ரமணா மற்றும் நந்தா உள்ளிட்டோர் படத்தை தயாரிக்கின்றனர். மேலும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்ய என் பி ஸ்ரீகாந்த் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் மோஷன் போஸ்டர், டீசர் உள்ளிட்டவை வெளியாக்கி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளது.

விஷாலின் லத்தி… 'ஊஞ்சல் மனம்' பாடலின் லிரிக்ஸ் வீடியோ வைரல்!.

இப்படியான நிலையில் இப்படத்தில் இடம்பெற்று இருக்கும் “ஊஞ்சல் மனம்” என்ற செகண்ட் சிங்கிள் பாடலின் லிரிக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. கார்த்திக் நேதா எழுதியுள்ள இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா, ரஞ்சித் கோவிந்த் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர். தற்போது இப்பாடலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Oonjal Manam - Official Lyric Video | Laththi | Vishal | Yuvan Shankar Raja | A Vinoth Kumar