
PS2 பணத்தன் பிரமோஷனுக்காக ட்விட்டர் கணக்கில் பெயரை மாற்றி ப்ளூ டிக்கை இழந்த சோழர்கள்.
தென்னிந்திய திரை உலகில் மாபெரும் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்திருந்தது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழு பயங்கரமாக தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் PS-2 பிரமோஷனுக்காக நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை திரிஷா தங்களது ட்விட்டர் கணக்கில் பெயரை அருண்மொழி வருமன், குந்தவை என மாற்றியதால் அவர்களது ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. அதாவது ட்விட்டர் கணக்கின் புதிய விதிகளின்படி கணக்குகளின் பெயரை மாற்றியதால் இருவரும் தங்களது ப்ளூடிக்குகளை இழந்துள்ளனர். இதுபோன்று முதல் பாகத்திற்கும் பிரமோஷனுக்காக படக்குழுவினர் பெயரை மாற்றி அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.