விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிபி ஜோடி நிகழ்ச்சியில் அமிர், பாவனிக்கு தாலி கட்டி குங்குமம் வைக்கும் புரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் சீசன் 5’ போட்டியாளராக கலந்து கொண்ட அமீர் மற்றும் பாவனி இருவரும் பிரபல காதல் ஜோடியாக தற்போது திகழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது இருவரும் ‘பிபி ஜோடிகள் சீசன் 2வில்’ போட்டியாளராக நடனமாடி வருகின்றனர்.

பிபி ஜோடியில் நடத்தப்பட்ட அமீர், பாவனி திருமணம் - வைரலாகும் பரபரப்பான ப்ரோமோ வீடியோ.

இந்த நிகழ்ச்சியில் அமீர் பாவனியிடம், அவருடைய காதலை சொல்வதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார். அதே போல கடந்த முறை, நடனம் ஆடும் போதும் குழந்தைகளை வைத்து பாவனியிடம் ரோஸ் கொடுத்து ப்ரொபோஸ் செய்தார் அந்த ப்ரோமோ வைரலானதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் கல்யாண கொண்டாட்டம் நடைபெறுகிறது.

பிபி ஜோடியில் நடத்தப்பட்ட அமீர், பாவனி திருமணம் - வைரலாகும் பரபரப்பான ப்ரோமோ வீடியோ.

இதில், அமீர் பாவனிக்கு பொட்டு வைத்து தாலி கட்டி உள்ளார். இந்த ப்ரோமோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள், விஜய் டிவி எப்படியோ இந்த ஜோடியை சேர்த்து வைக்காமல் விடாது போல என்று பல கருத்துக்களை கூறி வருகின்றனர்.

BB Jodigal 2 | 14th August 2022 - Promo 1