Annathae
Annathae

அண்ணாத்த படத்தில் ரஜினி நடிப்பது மட்டுமல்லாமல் இன்னொரு விஷயத்தையும் செய்திருப்பது அவரது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Updates on Annathae : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க குஷ்பு மற்றும் மீனா ஆகியோர் முறை பெண்களாக நடிக்கின்றனர். மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக நடிக்கிறார்.

ரஜினிய விடுங்க.. உங்க வேலைய பாருங்க, அண்ணாத்த குறித்து சிறுத்தை சிவாவுக்கு சன் பிக்சர்ஸ் போட்ட உத்தரவு.!!

சூரி மற்றும் சதீஷ் ஆகியோர் காமெடி வேடங்களில் நடிக்க பிரகாஷ்ராஜ் லிவிங்ஸ்டன் ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் முதலில் ரஜினி அல்லாத படப்பிடிப்புகளை நடத்தி முடித்துவிட்டு அடுத்த வருடத்தில் ரஜினி நடிக்க கூடிய காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

Sun Pictures Decision on Annathae

மேலும் பொதுவாக ரஜினி நடித்த சில படங்களில் அவருக்கான பஞ்ச் டயலாக்குகளை அவரே உருவாக்கி பேசியுள்ளார். அதுபோல தற்போது இந்த படத்திலும் சில பஞ்ச் டயலாக்குகளை உருவாக்கியுள்ளார்.

இதனை தொலைபேசி வாயிலாக சிறுத்தை சிவாவுக்கு சொல்ல அவரும் ரசித்து ருசித்து கேட்டுள்ளார். இந்த பஞ்ச் டயலாக் நிச்சயம் உங்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடிக்கும் என கூறியுள்ளார்.

இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.