தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார்.

தீபாவளிக்கு வெளியாக உள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது, அதே சமயம் இப்படத்தின் வியாபாரமும் சூடு பிடித்து வரும் நிலையில் தற்போது சென்னை மற்றும் கர்நாடக ரிலீஸ் உரிமையை பிரபல விநியோகிஸ்தரான அபிராமி ராமநாதன் மற்றும் ஸ்ரீ கோகுல் பிலிம்ஸ் நிறுவனம் சேர்ந்து அதிகமான விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.