ayothi ramar temple
ayothi ramar temple

Latest Updates About Ramar Temple : உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் திட்டமிட்டதைவிட பிரம்மாண்டமான ராமன் கோயில் கட்டும் வகையில் கட்டட வரைபடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கோயில் கட்டிடக்கலை வல்லுநர் சந்திரகாந்த் சோம்புரா தெரிவித்துள்ளார்.

ராமன் கோயில் சிறப்பம்சத்தை அவர் பற்றி கூறியதாவது:

ராமர் பிறந்த இடத்தில் கட்டப்படும் இக்கோயில், எனக்குகிடைத்த புனிதமான பணி. எனவே மிக அரிய வகையில் ஐந்து குவிமாடங்கள் உடன் ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. கோவில் கட்டடக் கலையில் சிறந்த வழிபாட்டுத் தலமாக இது திகழும். கட்டுமானப்பணிகள் தொடங்குவதில் இருந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் பணி நிறைவடையும்.

எங்கள் பரம்பரையில் “நாகர் மாதிரி”யில் (வட இந்திய கோயில் கட்டடக்கலை) கோயில் கட்டுமான வடிவங்களை அளித்தவர்கள். எனவே அயோத்தி ராமர் கோயிலும் நாகர் மாதிரியில் அமையும் என்றார்.

77 வயதான சோம்புரா 200க்கும் மேற்பட்ட கோயில்களை வடிவமைத்துக் கொடுத்த பரம்பரை குடும்பத்தை சேர்ந்தவர். இவர் ஏராளமான கோயில் கட்டுவதற்காக வடிவமைப்புகளை தந்துள்ளார். மேலும் சோம்புராவின் தாத்தா சங்கர் சோப்ரா குஜராத்திலுள்ள சோமநாதர் கோயிலை வடிவமைத்து கட்டி கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.