Latest Updates About Ramar Kovil : உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோயில் பூமிபூஜை பணிகள் தொடங்க உள்ளதை அடுத்து, கும்பகோணத்தில் இருந்தும், ராமேஸ்வரத்தில் இருந்து, புனிதநீர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் இருந்து மணல் எடுத்து ராமர் பாதம் போன்று வடிவமைக்கப்பட்டிருந்த பெட்டியில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து, ராமர் பாத பெட்டியை சங்கர மடத்திற்கு கொண்டுசென்று, அங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடத்தினர். அதை எடுத்து மணல் அடங்கிய பெட்டியை பார்சல் தபால் மூலம் அயோத்திக்கு அனுப்பி வைத்தனர்.

மகிழ்ச்சி தகவல் : சென்னையில் 84% கொரானா நோயாளிகள் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ்

இதேபோன்று கும்பகோணம் மகாமகம் குளத்திலிருந்து 5 குடங்களில் புனித நீர் எடுத்து செல்லும் நிகழ்ச்சி அனைத்து இந்து கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது. காசி விஸ்வநாதர் கோயில் அர்ச்சகர்கள் மகா மகம் தீர்த்தவாரி கட்டத்தில் இருந்து 5 குடங்களில் புனித நீர் எடுத்து கொடுத்து பூஜைகளை செய்தனர்.

இந்த புனித நீரானது தனி வாகனம் மூலம் அயோத்திக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.