Latest Update on Valimai Release
Latest Update on Valimai Release

எதிர்பாராத நேரத்தில் வலிமை படம் பற்றிய ஒரு சூப்பரான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

Latest Update on Valimai Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். உலகம் முழுவதும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர்.

இவர் தற்போது போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த வருட தீபாவளி ரிலீசாக உருவாக இருந்த இப்படம் கொரானா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் ரிலீஸ் அடுத்த வருட தீபாவளிக்கு தள்ளி போய் உள்ளது.

அந்த இடம் கிளீனா இருக்குன்னு காட்டுறீங்களா?? சிங்கப்பெண் இந்துஜா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் – கலாய்க்கும் ரசிகர்கள்

இந்த நிலையில் படக்குழு சூப்பரான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது வலிமை திரைப்படம் வெளியாகும் அதே நேரத்திலேயே இப் படத்தை இந்தியிலும் டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என 4 மொழிகளில் வலிமை திரைப்படம் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.

படக்குழுவினரின் இந்த முயற்சி வலிமை திரைப்படத்தின் வசூல் வேட்டையில் பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கலாம்.

தற்போது இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.