Latest Update on Master Trailer Release

விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Latest Update on Master Trailer Release : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விஜய் ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல்.. எதிர்பார்ப்பு ஏமாற்றம் ஆயிடுச்சே - மாஸ்டர் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்.!!

இந்த படம் உலகம் முழுவதும் ஜனவரி 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் மாஸ்டர் படத்தின் டிரைலர் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அதாவது தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலரை வெளியிடும் எண்ணத்தை படக்குழு கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது.

படத்தில் உள்ள சுவாரஸ்யங்கள் வெளியே தெரிந்துவிடும் என்பதால் நேரடியாக அவை அனைத்தையும் ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து அறிந்து கொள்ளட்டும் என்ற காரணத்திற்காக படக்குழு இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.