வாடிவாசல் திரைப்படத்தில் முக்கிய நடிகர் ஒருவரை நடிக்க இருப்பதாகவும் படத்தின் கதை என்ன என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

Latest Update of Vaadivasal Movie : தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய சேதுபதி நடிப்பில் விடுதலை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்க உள்ளார்.

விநாயகரை வழிபடும் முறையும் பலன்களும்.!

வாடிவாசல் படத்தில் இணைந்த முக்கிய நடிகர்.‌. படத்தின் கதை குறித்து தெரியவந்த தகவல் - செம அப்டேட் இதோ

இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் படத்தில் நடிகரும் இயக்குனருமான அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் கதை களம் 1960-ம் ஆண்டு காலகட்டத்தில் நடப்பதுபோல உருவாக இருப்பதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.

எங்க அப்பா அம்மா தான் சொல்லுவாங்க! – Actress Sanchita Shetty Speech | HD

கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் வாடிவாசல் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.