Latest Update of Thalapathy 65
Latest Update of Thalapathy 65

தளபதி 65 படத்திற்காக முருகதாஸ் இதுவரை இல்லாத அளவில் வேற லெவலில் பிளான் போட்டு வருகிறார்.

Latest Update of Thalapathy 65 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். ஒரே மாதிரியான ஸ்டைலில் நடித்து வந்த விஜய் துப்பாக்கி படத்தின் மூலமாக விருது ஸ்டைலுக்கு மாற்றியவர் முருகதாஸ்.

இவர் இறுதியாக தர்பார் என்ற படத்தை இயக்கியிருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இப்படம் திரைக்கதையில் ஏற்பட்ட சொதப்பல்களால் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

இவர் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து பிரமாண்டமாக தளபதி 65 என்ற படத்தை இயக்க உள்ளார். ஆரம்பத்தில் இந்த படத்திற்காக விஜய் இளம் இயக்குநர்களை தான் தேடினார்.

தல அஜித்தா இது?? சின்ன வயதில் எப்படி இருக்கார் பாருங்க – இதுவரை பார்த்திராத அரிய புகைப்படம்.!

ஆனால் இடையில் புகுந்து முருகதாஸ் கூறிய கதையும் தன்னை உயர்த்திய இயக்குநர் வாய்ப்பு கேட்டதால் மறுக்க முடியாமலும் இப்படத்திற்கு ஒகே கூறியுள்ளார்.

மேலும் முருகதாஸ் படத்தில் நடந்த தவறுகளை போல இப்படத்திலும் நடக்கக் கூடாது என்பதால் பலர் கதையாசிரியர்களிடம் திரைகதை குறித்து விவாதித்து வருகிறார்.

எப்படியாவது இம்முறை தன்னையும் தன் படத்தைப் பற்றியும் மக்களை பேச வைத்தாக வேண்டும் என்று தீயாக வேலை செய்து வருகிறாராம்.

மேலும் தளபதி 65 படம் விஜய் திரைப்பயணத்தில் வெளியாகும் பிரம்மாண்ட படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.