தளபதி 67 படம் பற்றி சூப்பரான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Latest Update of Thalapathy 65 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தினை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார்.

பழனி முருகன் தரிசனம் : முன்பதிவு கட்டாயம்..

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் வடபழனியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஷூட்டிங்கில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்.

இந்த படத்தினை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் தெலுங்கில் அல்லு அரவிந்த் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது.

Superstar ரஜினிகாந்த் பட வாய்ப்பை நழுவ விட்டுட்டேன் – யார் அந்த முன்னனி நடிகை?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.