Latest Update of Thalapathy 65
Latest Update of Thalapathy 65

தளபதி 65 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

Latest Update of Thalapathy 65 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது சென்சேஷனல் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கியுள்ள மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார். இதனை அவரே ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தி இருந்தார்.

Thalapathy Vijay Reaction For Master Movie

ஆனாலும் தளபதி 65 படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த படம் பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது பற்றிய தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன.

அதாவது வரும் புத்தாண்டு அல்லது பொங்கல் தினத்தில் தளபதி 65 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் எனவும் உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் பொங்கலுக்கு விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் டபுள் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.