Latest Update of Master Trailer
Latest Update of Master Trailer

மாஸ்டர் படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Latest Update of Master Trailer : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 9ம் தேதியே ரிலீசாக இருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது காரணமாக தள்ளி போய் உள்ளது.

இதனையடுத்து ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் டிரெய்லருக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி நிச்சயம் ட்ரைலர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

மிரட்டலான கேங்க்ஸ்டர் கதையில் மீண்டும் இணைந்த விஜய் ஸ்ரீ மற்றும் சாருஹாசன்!

இதனையடுத்து தற்போது கிடைத்துள்ள தகவலின்படி ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விருந்தாகவோ அல்லது அக்டோபர் 15-ஆம் தேதியோ இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இந்த நாட்களுக்காக தான் தளபதி விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 என்ற படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.