Latest Update About Valimai Shooting

தல ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக வலிமை படம் பற்றிய லேட்டஸ்ட் தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Latest Update About Valimai Shooting : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

தீரன் அதிகாரம் ஒன்று சதுரங்க வேட்டை நேர்கொண்டபார்வை ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் வினோத் அவர்கள் இப்படத்தை இயக்கி வருகிறார். பாலிவுட் தயாரிப்பாளரும் ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

கொரானா வைரஸ் தொற்று காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஐதராபாத்தில் ஷூட்டிங் தொடங்கி உள்ளது.

படத்தில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் அனைவரும் இந்த சூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளனர். அஜித் கலந்து கொண்டுள்ளார் என்பது குறித்த விவரம் இன்னும் தெரியவரவில்லை.

இருப்பினும் அதுவே படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி இருப்பது அஜித் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் படம் பற்றிய அப்டேட் வெளியாகும் என ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் தீபாவளி விருந்தாக வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனைக் கொண்டாடும் அஜித் ரசிகர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.