நடிகர் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம் என்னாச்சு அதன் ஷூட்டிங் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
Latest Update About Vadivasal Movie : தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக அமேசன் பிரைம் வீடியோ வழியாக வெளியாகியிருந்த திரைப்படம் சூரரை போற்று. சுதா கொங்கரா இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பையும் பாராட்டையும் அள்ளிக் குவித்தது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு அடுத்ததாக நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது சூர்யா வாடிவாசல் திரைப்படத்திற்கான டெஸ்ட் ஷூட்டை நடத்தி முடித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.