Latest Update About Pandian Stores
Latest Update About Pandian Stores

பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஷூட்டிங் தொடங்கி விட்டதாக சித்ரா தெரிவித்துள்ளார்.

Latest Update About Pandian Stores : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் சித்ரா. இவர் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் புதிய எபிசோடுகளை பார்ப்பீர்கள் என தெரிவித்துள்ளார்.

அதாவது தற்போது இந்த சீரியலுக்கான ஷூட்டிங் தொடங்கி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவால் இதுவரை சூட்டிங் இல்லாமல் இருந்ததால் பழைய எபிசோடுகளையே விஜய் டிவி மீண்டும் ஒளிபரப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் அடுத்த வாரம் முதல் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் புதிய எபிசோடுகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.