Master Audio Launch
மாஸ்டர் இசை வெளியீட்டு விழா பற்றி வெளியான தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Latest Update About Master Audio Launch : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் சிறு தினங்களுக்கு முன்னர் தான் முழுமையாக நிறைவடைந்தது, தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

விக்ரம் படத்தை கிண்டலடித்த ரசிகர்.. விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த பிரபல இயக்குனர் – இதோ இதை நீங்களே பாருங்க.!

மேலும் சமீபத்தில் தான் விருது விழா ஒன்றில் பேசிய லோகேஷ் இப்படத்தின் டீஸர் தயாராகி வருவதாகவும் விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து தற்போது இசை வெளியீட்டு விழா பற்றி தகவல் ஒன்று கசிந்துள்ளது, வரும் மார்ச் 15-ம் தேதி ஹோட்டல் ஒன்றில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாம்.

மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. படக்குழுவினர் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்க ஸ்ரீ திவ்யாவா இது?? ரசிகர்களை ஷாக்காக்கிய லேட்டஸ்ட் புகைப்படம் – எவ்வளவு அழகாகிட்டாரு பாருங்க.!

விஜய் சொல்ல போகும் குட்டி கதையை நேரில் கேட்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த விஜய் ரசிகர்கள் இந்த தகவலால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது சமூக வளையதளங்களில் பரவி வரும் தகவல் தான், உண்மை என்ன என்பது அறிவிப்பு வெளியானால் உறுதியாக தெரிந்து விடும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.