கைதி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Latest Update About Khaithi 2 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் கைதி.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என அப்போதே அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை கைதி படத்தின் இரண்டாம் பாகம் பற்றி எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

அண்ணன் வழியில், ஆட்சி செய்கிறார் ஸ்டாலின் : டிடிவி தினகரன் கிண்டல்

இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இயக்கி வரும் விக்ரம் படம் 2022 கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது. இந்த படம் வெளியான பிறகு கைதி 2 இப்படத்தின் படப்பிடிப்புகளை தொடங்குவார் என தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக பிஜி முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Maanaadu Box Office Collection-ஐ வெளியிட்ட படக்குழு! | Simbu | SJ Suryah | Kalyani | Venkat Prabhu