விக்ரம் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கோப்ரா பட இயக்குனர் அஜய் ஞானமுத்து அப்டேட் வெளியிட்டுள்ளார்.

Latest Update About Cobra Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன், மற்றும் மகான் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

கோப்ரா திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்க செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அதேபோல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மகான் திரைப்படத்தையும் இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து அவருடைய மகன் துருவ் விக்ரம் நடித்துள்ளார். இந்தப்படம் அமேசான் பிரைம் வீடியோ வெளியாகும் என சொல்லப்பட்டு வருகிறது.

படத்துக்கு செம Response – வெட்கப்பட்டு பேசிய Hip hop Tamizha Adhi | Anbarivu Special Show | HD

இந்த நிலையில் கோப்ரா படம் பற்றிய சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சியான் விக்ரம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவு செய்து உள்ளார். ஷூட்டிங்கின் கடைசி நாளில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படத்தில் அஜய் ஞானமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

16 வகை லட்சுமிகளும், வழிபாட்டுப் பலன்களும்.!

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் இப்பதான் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.