நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் பீஸ்ட் படத்தில் நான்காம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் தளபதி விஜய்.
Latest Shooting Update of Beast Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெட்ஜ் நடிக்க யோகி பாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், சகோ என பலர் இந்த படத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.
சென்னையில், இன்றுமுதல் 200 நிரந்தர தடுப்பூசி முகாம்கள் : மாநகராட்சி தகவல்
ஏற்கனவே இந்தப் படத்தில் மூன்று கட்ட படப்பிடிப்புகள் நடந்து முடிந்த நிலையில் நேரத்தை வீணடிக்காமல் தளபதி விஜய் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு முடிந்து நடந்து முடிந்த ஓரிரு நாட்களிலேயே நான்காம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோஸ் இதற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
எங்கு பார்த்தாலும் Thala Ajith-ன் வலிமை மட்டும்தான் – கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்..!