மகனின் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்பதின் மூலம் தனுஷ் – ஐஸ்வர்யா ஒன்றாக சேர்ந்து கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த வகையில் ரசிகர்களை மீண்டும் உற்சாகப்படுத்தும் விதமாக தனுஷ் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து எடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகனுக்காக ஒன்று சேர்ந்த தனுஷ்-ஐஸ்வர்யா!!... வெளியான வைரல் புகைப்படம்.

அதாவது கடந்த ஆண்டு தனுஷும்- ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களது பிரிவால் தனுஷ் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்து வந்தனர். இருவரும் ஒன்றாக மீண்டும் இணைய வேண்டும் என்று பலமுறை தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்து வந்தனர்.

மகனுக்காக ஒன்று சேர்ந்த தனுஷ்-ஐஸ்வர்யா!!... வெளியான வைரல் புகைப்படம்.

ஆனால் இருவரும் விவாகரத்துக்கு பிறகு தங்களது பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தற்போது இவர்களது மூத்த மகனான யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சிக்கு தனுஷும்-ஐஸ்வர்யாவும் முதல் முறையாக ஒன்றாக வந்துள்ளனர். அப்போது தனுஷ்-ஐஸ்வர்யா அவர்களது இரண்டு மகன்கள் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதனைக் கண்டு உற்சாகமடைந்த ரசிகர்கள் அப்புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

மகனுக்காக ஒன்று சேர்ந்த தனுஷ்-ஐஸ்வர்யா!!... வெளியான வைரல் புகைப்படம்.