Latest Photo About Thalapathy 65
Latest Photo About Thalapathy 65

தளபதி 65 என முருகதாஸ் பெயரில் வெளியான புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

Latest Photo About Thalapathy 65 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

படமே ரெடியாகல அதற்குள் தளபதி 65 ரிலீஸ் தேதி குறித்து வெளியான செம மாஸ் தகவல்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் அடுத்த படம் இவருடன் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகி விட்டது. மேலும் இப்படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் எனவும் இப்படத்திற்கு சோல்ஜர் என டைட்டில் வைத்திருப்பது போலவும் தகவல்கள் கசிந்து இருந்தன.

இந்த நிலையில் ட்விட்டரில் முருகதாஸ் பெயரில் உலா வரும் போலி கணக்கு தளபதி 65 எனக் குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் வெயிட்டிங் என கமெண்ட் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் இது போலி கணக்கு என தெரிந்த விஜய் ரசிகர்கள் இந்த கணக்கின் சொந்தக்காரரை விமர்சித்து வருகின்றனர்.

https://twitter.com/ARMurugaadoss/status/1246778591062327299?s=19