நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பாகுபலி கட்டப்பா போல் வைத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாலிவுட் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான காஜல் அகர்வால் கோலிவுட்டில் பழனி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்த ‘மஹதீரா’ திரைப்படம், அவருக்கு மிகப் பெரிய மார்க்கெட்டை பெற்றுக்கொடுத்தது.

கட்டப்பாவாக மாறிய காஜல் அகர்வால் - வைரலாகும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி புகைப்படம்.

அதன் மூலம் தமிழ் தெலுங்கு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கலக்கிக் கொண்டிருந்த காஜல் அகர்வால் 2020இல் கௌதம் கிச்சலு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்திருக்கும் காஜல் அகர்வால் முழு நேரமும் தனது குழந்தையோடு நேரத்தை செலவிட்டு வருகிறார். அதோடு தனது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுக்காக அவ்வப்போது புதுவிதமான புகைப்படங்கள் மற்றும் குழந்தையோடு இருக்கும் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டு வருவார்.

கட்டப்பாவாக மாறிய காஜல் அகர்வால் - வைரலாகும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி புகைப்படம்.

அதேபோல் தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பாகுபலி கட்டப்பாவை போல் தனது தலை மேல் குழந்தையின் பாதத்தை வைத்து போஸ் கொடுக்கும் புகைப்படத்தை பாகுபலி பாடலுடன் வைத்திருக்கிறார். அத்தோடு இதனை இயக்குனர் இப்புகைப்படத்தை ராஜமெளலிக்கு டெடிகேட் செய்வதாகவும் பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தோடு இருக்கும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டப்பாவாக மாறிய காஜல் அகர்வால் - வைரலாகும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி புகைப்படம்.