வடிவேலுவின் அப்பத்தா பாடல் குறித்த தகவல் வைரல்.

வைகைப்புயல் வடிவேலு அவர்கள் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இதில் அவருடன் இணைந்து பிக்பாஸ் ஷிவானி, சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளார்கள்.

10 வருட தடையை பாட்டில் வைத்து கிண்டலடித்த வடிவேலு - அப்பத்தா பாடலில் இதெல்லாம் நோட் பண்ணீங்களா?

காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் வடிவேலு பாடிய “அப்பத்தா” என்ற பாடலின் வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

10 வருட தடையை பாட்டில் வைத்து கிண்டலடித்த வடிவேலு - அப்பத்தா பாடலில் இதெல்லாம் நோட் பண்ணீங்களா?

இந்நிலையில் இப்பாடலில் உள்ள வரிகளை உற்று கவனிக்கையில் அவர் 10 வருடம் நடிப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்த தனது வேதனைகளை இப்பாடலில் போற போக்கில் கிண்டல் அடித்து தெரிவித்திருக்கிறார். இதனால் வைகை புயலின் ரீ என்ட்ரியை நாயகன் மீண்டும் வரார் என்று கமல் பாணியில் ரசிகர்கள் உற்சாகப்படுத்தி வருகின்றனர்.