நடிகை தமன்னா ஃப்ரீயாக இருக்கும் போது நேரத்தை செலவிடுவதற்காக புதிய முயற்சி ஒன்றை எடுத்து இருக்கிறார் அதனை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழில் கடைசியாக நடிகர் விஷாலுடன் இணைந்து ஆக்சன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில் தமிழ் தமன்னாவிற்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து விட்டது.

தமன்னாவின் புதுமையான பொழுதுபோக்கு.. என்ன தெரியுமா??

அதனால் தமிழில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட தமன்னா ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் நடிகை தமன்னா தனது ஓய்வு நேரத்தில் புதிய பொழுதுபோக்கில் ஈடுபடுவதன் மூலம் தன்னை ரிலாக்ஸ் செய்து வருகிறார்.

தமன்னாவின் புதுமையான பொழுதுபோக்கு.. என்ன தெரியுமா??

அதாவது தற்போது நடிகை தமன்னா ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் கைகளால் மண்பாண்டங்கள் செய்யும் கலையை கற்றுக் கொண்டு முயற்சித்து வருகிறார். அதனை ஒரு வீடியோ பதிவின் மூலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதனைப் பார்த்து ரசிகர்கள் தமன்னாவின் இந்த புதிய முயற்சியை பாராட்டி ஏராளமான லைக்ஸ்களையும் கமெண்ட்களையும் குவித்து வருகின்றனர்.