நடிகர் விஜய் தனது உதவியாளர் எண்ணில் இருந்து நடிகை சுனைனாவுக்கு போன் செய்து ஷாக் கொடுத்துள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வருபவர் தான் நடிகை சுனைனா. இவர் தற்போது விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் “லத்தி” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்து இருக்கிறார். அண்மையில் நடந்து முடிந்த இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகை சுனைனா தளபதி விஜய் அவர்கள் தனக்கு போன் செய்து ஷாக் கொடுத்துள்ளதாக புதிய தகவலை பகிர்ந்திருக்கிறார்.

சுனைனாவுக்கு போன் செய்து ஷாக் கொடுத்த நடிகர் விஜய் - வெளியான லேட்டஸ்ட் தகவல்.

அதாவது நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் வந்து கொண்டிருக்கும்போது நடிகை சுனைனாவை பார்த்த தளபதி விஜய் தனது உதவியாளரின் எண்ணில் இருந்து அவருக்கு போன் செய்து ஷாக் கொடுத்துள்ளார்.

சுனைனாவுக்கு போன் செய்து ஷாக் கொடுத்த நடிகர் விஜய் - வெளியான லேட்டஸ்ட் தகவல்.

அதற்குப் பின் இருவரும் ஒன்றாக விமானத்தில் பயணிக்கும் போது நடிகை சுனேனா தனது லத்தி படத்தின் டீசர் நிகழ்ச்சி குறித்து தெரியப்படுத்தியுள்ளார். அதற்கு லத்தி படத்திற்காக சுனைனாவுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய், விஷாலுக்கும் தனது வாழ்த்தை தெரிவிக்குமாறு கூறியுள்ளார். இந்த சுவாரசியமான லேட்டஸ்ட் தகவலை நடிகை சுனேனா லத்தி படத்தின் டீசரின் போது அனைவரிடமும் பகிர்ந்து உள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் விஜய் மற்றும் சுனைனா இருவரும் “தெறி” படத்தில் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.