நடிகை ஸ்ருதிஹாசன் பகிர்ந்து உள்ள சுவாரசியமான தகவல் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் டாப் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்ருதிஹாசன். உலக நாயகன் கமல்ஹாசனின் மகளான இவர் தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்த இவர் அண்மையில் பகிர்ந்து உள்ள சுவாரஸ்யமான தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

மற்றவர்களுக்காக வாழ்வது மிகவும் கடினம்!!… ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ள சூப்பர் தகவல்.!

அதில் அவர், மற்றவர்களை மகிழ்விக்க வாழ்வது என்பது மிகவும் கடினமானது, அனைவருக்கும் பிடிக்கும் வகையில் உடை அணிவது, பேசுவது, நடந்து கொள்வது எல்லாம் வாழ்வில் மிகவும் கடினமான விஷயங்கள். நாம் ஏற்கப்படும் விதத்தை மாற்றும் இது ஆபத்தானது என்று கூறியுள்ளார். மேலும் மனதிற்குள் மகிழ்ச்சியாக இருப்பது அவசியம், நானும் அப்படியே இருப்பேன் என்று தெரிவித்திருக்கிறார். இவரது இந்த சுவாரசியமான தகவல் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.