நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்து 47 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

Latest news about Rajinikanth:

கோலிவுட் திரை வட்டாரத்தில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கும் ஜெய்லர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தனது அழகான ஸ்டைலால் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவர் திரைத்துறைக்கு நடிக்க வந்து 47 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தை நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அனைவரும் நடிகர் ரஜினிகாந்திருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.