வெளிநாட்டு பயணத்தின் போது தனக்கு ஏற்பட்ட மோசமான சம்பவத்தை நஸ்ரியா பகிர்ந்துள்ளார்.

பிரபல மலையாள நடிகையனா நஸ்ரியா தனது க்யூட்டான எக்ஸ்பிரஷன் மற்றும் நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். இவர் தமிழ் சினிமாவிலும் ராஜா ராணி, வாயை மூடி பேசவும், நையாண்டி, நேரம் போன்ற ஒரு சில படங்கள் மட்டும் நடித்திருந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இனிமேல் அந்த விமானத்தில் நான் பயணம் செய்ய மாட்டேன்… நஸ்ரியாவின் பரபரப்பான பதிவு.!

இவர் பிரபல மலையாள நடிகரான பகத் பாஸில் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அதற்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட நஸ்ரியா நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘அடடே சுந்தரா’ என்ற படத்தின் மூலம் தமிழ்,தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இப்படம் சென்ற ஜூன் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இனிமேல் அந்த விமானத்தில் நான் பயணம் செய்ய மாட்டேன்… நஸ்ரியாவின் பரபரப்பான பதிவு.!

இந்நிலையில் நடிகை நஸ்ரியா தாய்லாந்து பயணத்தின் போது தாய் ஏர்வேஸ் விமானத்தில் தனக்கு நடந்த ஒரு மோசமான அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார். அதில் அவர், தாய் ஏர்வேஸின் சேவை மிக மோசமாக இருந்தது. விமானத்தில் எனது பைகள் காணாமல் போனதால் உதவி கேட்டு பணியாளர்களை அழைக்கும் போது அவர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. இனிமேல் என் வாழ்க்கையில் அந்த விமானத்தில் பயணம் செய்ய மாட்டேன் என குறிப்பிட்டிருக்கின்றார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.