ரெட் லைட்டை வைத்து புதுவிதமாக போட்டோ ஷூட் நடத்திய ஜூலியின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஜூலி. அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டு பெயரை மொத்தமாக டேமேஜ் செய்து கொண்ட இவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகள் மீண்டும் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது பல்வேறு படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். மேலும் தனது இன்ஸ்டாகிராமில்அதிக பாலோவர்ஸை வைத்திருக்கும் ஜூலி அடிக்கடி வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவார்.

அதனால் அவரது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அதேபோல் தற்போது சிகப்பு நிற லைட் வெளிச்சத்தில் வித்தியாசமாக போட்டோ ஷூட் செய்துள்ள ஜூலி அதனையும் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ பதிவும் தற்போது வைரலாகி வருகிறது.