75 ஆவது சுதந்திர தினமான இன்று தனது வீட்டின் முன் தேசிய கொடியை ஏற்றி வைத்து தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார் ஆக்சன் கிங் அர்ஜுன்.

கோலிவுட் திரை உலகில் ஆக்சன் கிங் ஆக வலம் வருபவர் தான் நடிகர் அர்ஜுன். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளிலும் நடித்து அசத்தியிருக்கிறார். முதல்வன் மற்றும் ஜென்டில்மேன் போன்ற திரைப்படங்கள் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்த இவர் அதிக அளவில் ஆக்சன் திரைப்படங்களில் நடிப்பதால் அவருக்கு “ஆக்ஷன் கிங்” என்ற சிறப்பு பெயர் ரசிகர்களால் வைக்கப்பட்டது.

தேசிய கொடியை ஏற்றி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய ஆக்சன் கிங் அர்ஜுன் - வெளியான வைரல் புகைப்படம்.!!

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு திரையுலகினர் முதல் ரசிகர்கள் வரை தங்களது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் நடிகர் அர்ஜுன் இன்று 75 ஆவது சுதந்திர தினத்தை தேசியக்கொடி ஏற்றி, தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.