Latest Details on Doctor Release

டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகுமா அல்லது OTT ரிலீஸா என்பது பற்றிய லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

Latest Details on Doctor Release : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

டாக்டர் ரிலீஸ் தியேட்டரா?? OTT-ஆ? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

கோலமாவு கோகிலா படத்தினை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். படம் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொரானா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால் படத்தின் ரிலிஸில் சிக்கல் ஏற்பட்டது.

இதனையடுத்து இந்தப் படம் நேரடியாக OTT வழியாக வெளியாக உள்ளது என பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது டாக்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் அல்லது நேரடியாக OTT-யில் வெளியாகுமா என்பது குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது டாக்டர் திரைப்படத்தை OTTயில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.