Latest Details of Maanadu Release

கொரானாவால் மாநாடு படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

Latest Details of Maanadu Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து டப்பிங் பணிகள் தொடங்கியுள்ள இந்த படம் ரம்ஜான் விருந்தாக வெளியாகும் என கூறப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநாடு படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இத்திரைப்படம் ஜூன் மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஒருவேளை ஜூன் மாதத்திலும் கொரோனா பரவலில் தீவிரம் குறையவில்லை என்றால் மீண்டும் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் என படக்குழு தரப்பில் இருந்து கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் சிம்பு ரசிகர்கள் மாநாடு படத்திலிருந்து உறுதியான ரிலீஸ் தேதி எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.