Kamal and Shankar

இந்தியன் 2 படம் பாதியில் நின்று போய் விடும் நிலையில் கமல் எடுத்துள்ள முடிவு சங்கரை அடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

Latest Details of Indian2 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை ஷங்கர் இயக்குகிறார்.

படம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து பல பிரச்சனைகளையும் தடங்கல்களையும் சந்தித்து வருகிறது. முதலில் கமலுக்கு மேக்கப் சரியில்லை என படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தளபதி 65 தொடங்குவது எப்போது? தளபதி 66 இயக்குனர் யார்? – ஒரே நேரத்தில் வெளியான இரண்டு அப்டேட்.!!

இதனையடுத்து கொரானா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில் விரைவில் இந்தியன் 2 தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இப்படியான நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை தொகுத்து வழங்க உள்ளார். 100 நாட்கள் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் குறைந்தது 30 முதல் 40 நாட்களாவது கால்சீட் கொடுக்க வேண்டியிருக்கும்.

இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் கமல் உடனே சட்டமன்ற தேர்தலுக்கான வேலையில் இறங்கி விடுவார். இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு என்பது கேள்விக்குறியான ஒன்றாகவே மாறியுள்ளது.

கமலை நம்பி களத்தில் இறங்கி விட்டு தற்போது படத்தை முடிக்க முடியாமல் தவித்து வரும் சங்கர் உலக நாயகன் எடுத்துள்ள இந்த முடிவால் கொஞ்சம் கருப்பில் இருந்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் இந்தியன் 2 திரைப்படம் திட்டமிட்டபடி முடிந்து திரைக்கு வருமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.