இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து படப்பிடிப்பு தளத்தில் விஜயுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

Latest Bloody Sweet pic of Thalapathi vijay & Lokesh kanagaraj treanding:

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தற்போது பிரபல முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஜோராக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ் கனக ராஜிருக்கு ரசிகர்களும், திரைப்படங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் “எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி விஜய் அண்ணா” எனக் குறிப்பிட்டு தளபதி விஜய்யுடன் படப்பிடிப்பு தளத்தில் இணைந்து எடுத்துக்கொண்டா லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதனை ரசிகர்கள் ஹேஷ்டேக் தளபதி விஜய் என ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர்.