தமிழ் சினிமாவில் காதல் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகி அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருபவர் பரத். இவளது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகின்றன.

ஆகஸ்ட் 5ல் வெளியாகும் பரத்தின் Last 6 Hours

இவரது நடிப்பில் அடுத்ததாக ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் தான் Last 6 Hours. சுனீஷ்குமார் என்பவர் இந்த படத்தை இயக்க அனூப் காளிட் என்பவர் படத்தை தயாரித்துள்ளார். மூவி ட்ரேடர்ஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிட உள்ளது. சீனு சித்தார்த் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் என்பவர் இசையமைத்துள்ளார்.

ஆகஸ்ட் 5ல் வெளியாகும் பரத்தின் Last 6 Hours

பரத்தின் மிரட்டலான அதிரடி ஆக்சன் திரைப்படமாக இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து யூ ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் குறித்த போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஆகஸ்ட் 5ல் வெளியாகும் பரத்தின் Last 6 Hours